Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானது உண்மையா? பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (06:15 IST)
india vs china
இந்திய சீன எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் முதல்கட்ட தகவலின்படி இந்திய தரப்பில் மூன்று இராணுவ வீரர்களும் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்களும் பலியானதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து இரு நாட்டு எல்லையில் பதட்டம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் அதற்குப்பின் வந்த தகவலின்படி இந்த மோதலில் படுகாயமடைந்த 17 இந்திய வீரர்கள் மரணமடைந்ததாகவும் இதனை அடுத்து இந்திய தரப்பில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்ததாகவும் செய்திகள் வெளியானது 
 
அதேபோல் சீனாவின் தரப்பில் முதலில் 5 வீரர்கள் மட்டுமே பலியானதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் மொத்தம் 43 பேர் பலியானதாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் ஆனதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும் இந்திய அரசு இந்தியாவில் 20 பேர் வீரமரணம் அடைந்த செய்தி வெளியானது போல், சீனாவில் 43 பேர் உயிரிழந்தது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
சீன அரசு அல்லது சீன ராணுவம் இதுவரை அதிகாரபூர்வமாக 43 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சீன ஊடகங்கள் 43 பேர் உயிரிழந்த செய்தியை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments