Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கும் 3 நாடுகள்: பதிலடி தருமா இந்தியா?

ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கும் 3 நாடுகள்: பதிலடி தருமா இந்தியா?
, செவ்வாய், 16 ஜூன் 2020 (17:07 IST)
border countries
சீனா பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 3 நாடுகளில் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இவ்வாறு எல்லையில் உள்ள 3 நாடுகளும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுத்த வரலாறு இல்லை. நேற்று இரவு இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீனா தரப்பிலும் 5 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பல ஆண்டுகள் பகை இருக்கிறது. சமீபத்தில் கூட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை கைது செய்த பாகிஸ்தான் அதன் பின் விடுதலை செய்தது. இதனால் இந்திய பாகிஸ்தான் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது 
 
அதேபோல் நேபாள நாடும் தனது புதிய வரைபடத்தை வெளியிட்டு இந்தியாவின் பகுதிகளையும் தனது நாட்டுப் பகுதி என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் அளவு கூட இல்லாத நேபாளம் இவ்வளவு துணிச்சலுடன் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கனவே சிஏஏ பிரச்சனை காரணமாக வங்கதேசம், இந்தியா மீது கடும் அதிருப்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்ஹான் ஆகிய நாடுகள் இந்தியாவின் நட்பு நாடு என்று கூறமுடியாது. எப்போது வேண்டுமானாலும் அவை இந்தியாவுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் திடீரென இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதால் இந்திய அதற்கு எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து: அதிரடி அறிவிப்பு