Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (12:38 IST)
ஈரான் நாட்டில் இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஈரான் நாட்டில் சர்ச்சைக்குரிய ஆடை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 
 
இதனை செய்தியாக பதிவு செய்த இரண்டு பெண் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பில் இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தண்டனை பெற்ற இரண்டு பெண் பத்திரிகையாளர்களுக்கும் அமெரிக்கா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விருது அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments