Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் அதிரடி தடை: நெருக்கடியில் மலேசிய வணிக நிலை!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:15 IST)
பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள தடைகளால் கடும் நெருக்கடியான சூழலுக்குள் மலேசியா தள்ளப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் எதிர்த்தன. அதில் மலேசியாவும் குறிப்பிடத்தக்க நாடு. 
 
ஆம், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, மதசார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா முஸ்லீம் மக்களின் குடியுரிமையை பறிக்க செய்யும் நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன. இதே போல் நாங்களும் சட்டம் போட்டால் இங்கும் கூட குழப்பமும், நிலையற்ற தன்மையும் உண்டாகும். அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். 
 
இதற்கு அப்போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், , மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உண்மையில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உட்பட்ட விஷயத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என  பதிலடி கொடுத்தது. 
 
இது போதாது என்று, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை இந்தியா குறைக்க முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 44 லட்சம் டன் பாமாயிலை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் தற்போது இந்திய அரசின் அறிவுறுத்தலால் வணிகர்கள் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்கின்றனர்.
 
பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள தடைகளால் கடும் நெருக்கடியான சூழலுக்குள் மலேசியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

தவெகவின் அடுத்த மூவ்.. கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கு! - நேரில் கலந்து கொள்ளும் விஜய்!

அமெரிக்கா செல்ல விமான கட்டணம் திடீர் குறைவு.. டிரம்ப் தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments