Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஜ்பாய் வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.: இம்ரான்கான்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (17:51 IST)
கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்றும் இதனை வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்திருந்ததாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக எதிர்க்கட்சி ஆனது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 145 தொகுதிகளிலும் 364 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 138 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் பேட்டி ஒன்றில் கூறியபோது, '2004-ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என வாஜ்பாய் தன்னிடம் தெரிவித்திருந்தார் என்று கூறினார். இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments