Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு நான்தான் பிரதமர், என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை: ரணில் அதிரடி

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (23:12 IST)
இலங்கைக்கு இன்னும் நான்தான் பிரதமர் என்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபர் உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை விடுதலை கட்சி மற்றும் ஒருங்கிணைந்த தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வெற்றி பெற்று இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமாகவும் பதவியேற்றனர். முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனனயடுத்து சிறிசோன கட்சியின் அரசில் இருந்து ராஜபக்சே கட்சி இன்று திடீரென விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டாது. இதனையடுத்து அடுத்த அதிரடியாக ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ராஜபக்சேவை சிறிசேனா பிரதமர் ஆக்கினார்

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்கே,' இன்னும் இலங்கைக்கு நான்தான் பிரதமர். நான் பிரதமராக நீடிக்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபர் உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. ராஜபக்சேவே பிரதமராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது மட்டுமின்றி ஜனநாயக விரோத சதிச்செயல் என்று கூறியுள்ளார். இதனால் இலங்கையின் உண்மையான பிரதமர் யார்? என்ற குழப்பத்தால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments