Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு கைதிகளை அனுப்பும் ஹாங்காங் – மக்கள் போராட்டம் வெடித்தது

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (12:00 IST)
சீனாவுக்கும், ஹாங்காங்குக்கும் இடையே முடிவாகியுள்ள கைதி மாற்ற ஒப்பந்தத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர்.

சீனாவின் ஒரு பகுதியாக அறியப்படும் ஹாங்காங் உண்மையில் தனி நாடாக இல்லாமல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு பகுதியாக உள்ளது. சீனாவின் வெளியுறவு கொள்கைகளிலும், சட்டத்திட்டங்களிலும் பெருமளவு உடன்படாத நிலையே ஹாங்காங்கில் உள்ளது.

இந்நிலையில் ஹாங்காங் சீனாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது. அதன்படி ஹாங்கங்கில் குற்றம் புரிந்து சிறை தண்டனை பெறுவோரை தேவைப்பட்டால் சீனாவின் சிறைகளில் அடைத்து கொள்ளலாம் என அச்சட்டம் வலியுறுத்துகிறது. கைதி பரிமாற்ற ஒப்பந்தம் என அழைக்கப்படும் இத்திட்டம் ஹாங்காங்கில் சிறைகள் குறைவாகவே இருப்பதாகவும், அதனால் சீனாவோடு ஒரு புரிதலின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் ஹாங்காக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மக்கள் ”சீன சிறைகளில் அடைக்கப்படும் கைதிகள் அந்த நாட்டு சட்டதிட்டத்தின்படியே நடத்தப்படுவர். மேலும் அவர்கள் குற்றங்கள் மீதான விசாரணைகளில் சீனாவின் சட்டதிட்டங்கள் உடபுகுத்தப்படும். இது ஹாங்காங்கின் அரசியல் சட்டத்திட்டத்திற்கு எதிரானது” என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 10000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட நேற்றைய ஆர்பாட்டத்தில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments