Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவில் கடும் புயல் பாதிப்பு..100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

cyclone
, செவ்வாய், 14 மார்ச் 2023 (23:13 IST)
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மலாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரெடி புயல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரெடி என்றுபெயரிடப்பட்ட புயல் உருவானது. வெப்பமண்டல புயலான இது, கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மடகாஸ்டர் வழியாக, இந்திய பெருங்கடலில் பரவி, பிப்ரவரி 24 ஆம் தேதி மொசாம்பிக்கில் கரைகடந்தது.

இந்தப் புயல், மொசாம்பிக்கில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதில், அருகிலுள்ள சிறு நாடான மாலாவியும் பெருமளாவில் பாதிப்பை சந்தித்தது.

இதுகுறித்து அந்த நாட்டில் பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறியுள்ளதாவது: ‘'பிரெடி புயல் கரையைக் கடந்தபோது, பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டது, அத்துடன் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதற்கொண்டு, பெரியோர் வரை உயிரிழந்தனர்.  சுமார் 134 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரைக் காணவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 ஆம் உலகப்போரை தடுக்க என்னால்தான் முடியும்- முன்னாள் அதிபர் டிரம்ப் பரப்புரை