Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேக்கர்களால் உடைக்க முடியாத ஆப்பிள் நெட்வொர்க்கை உடைத்த சிறுவன்

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (21:59 IST)
உலகின் சிறந்த ஹேக்கர்களால் கூட நுழைய முடியாத ஆப்பிள் நெட்வொர்க்கில் 16 வயது சிறுவன் ஒருவன் நுழைந்து ஃபைல்களை திருடியுள்ள செய்தி அந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது
 
உலகிலேயே ஹேக்கர்களால் எளிதில் உடைக்க முடியாத அளவிற்கு வலுவான நெட்வொர்க்கை கொண்டது ஆப்பிள் நிறுவனத்தின் நெட்வொர்க். இந்த நெட்வொர்க்கில் நுழைய பல ஹேக்கர்கள் முயன்றும் இன்று வரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்தே ஆப்பிள் நெட்வொர்க் பாதுகாப்புகளை தகர்த்து அதிலிருந்து 90ஜிபி அளவுக்கு பைல்களை டவுண்லோட் செய்துள்ளதாகவும், அந்த சிறுவன் டவுன்லோடு செய்த பைல்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான ரகசிய பைல்கள் என்றும் கூறப்படுகிறது
 
இது குறித்து அறிந்த ஆப்பிள் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அமெரிக்க உளவு அமைப்பு எஃப்.பி.ஐ. மற்றும் ஆஸ்திரேலிய போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இதுகுறித்து ஐபி முகவரியை வைத்து அந்த சிறுவனை கண்டுபிடித்து விசாரணை செய்தபோது தான் ஃபைல்களை திருடியதாக ஒப்புக்கொண்டதோடு, ஆப்பிள் நிறுவனத்தில் வேலையில் சேரவே இதனை செய்ததாக கூறியுள்ளான். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments