Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிக்க தண்ணீர் தாருங்கள்; பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ

குடிக்க தண்ணீர் தாருங்கள்; பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ
, செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (12:41 IST)
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே  சண்டை நடைபெற்று வருகிறது. 
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 700  பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இந்தியா முழுவதும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி நெஞ்சை உலுக்கும் ஒரு  சம்பவம் சிரியாவில் நடந்து வருகிறது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஓடி விளையாடும் வயதில் ரத்தத்தையும், குண்டு வெடிப்பையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் சிரியா நாட்டு குழந்தைகள். ஓட்டுமொத்த சிரியாவும் தற்போது ரத்த பூமியாகவே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு புகைப்படங்களும்  பார்ப்போர் உள்ளத்தை நொருங்க செய்கிறது.
 
இந்நிலையில் அந்நாட்டு சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில் யாருக்கும் மனசாட்சி இல்லையா? குழந்தைகள் என்றும் பாராமல் கொள்கின்றனர். ஏன் எங்களை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை? எங்களுக்கு குடிக்க தண்ணீரிலில்லை, உண்ண உணவில்லை, தூங்க இடமில்லை, உயிருக்கு பயந்து ஒழிந்துகொண்டிருக்கிறோம் என கண்ணிர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்த பூமியாக காட்சியளிக்கும் சிரியா; பிரபல நடிகரின் ட்வீட்