Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காயை வெடிகுண்டு என நினைத்து சோதனை; போலீசாரை முட்டாளாக்கிய முதியவர்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2017 (11:19 IST)
ஜெர்மனியில் முதியவர் கூறியதை நம்பி காவல்துறையினர் கத்திரிக்காயை வெடிகுண்டு என நினைத்து சோதனை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 

 
ஜெர்மனியை சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய வெடிகுண்டு கிடக்கிறது. அது இரண்டு உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
முதியவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் முதியவரின் வீட்டிற்கு சென்றனர். அதை சோதனை செய்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை செய்த பின்னர் அது வெடிகுண்டு இல்லை கத்திரிக்காய் என தெரியவந்துள்ளது.
 
40 செ.மீ நீளமுள்ள பெரிய கத்திரிக்காயை முதியவர், வெடிகுண்டு என நினைத்து தவறாக தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினரும் அதை வெடிகுண்டு என நினைத்து சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜப்பான் நாட்டில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலப் போரில் அனு ஆயுதம் பயன்படுத்திய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அந்த வகையில் ஒருவேளை வெடிகுண்டு இருக்கலாம் என நினைத்து காவல்துறையினர், முதியவர் கொடுத்த தகவலை நம்பி சோதனை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments