Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிரணியை சேர்ந்தவரின் ஆணுறுப்பை கடித்து வைத்த கால்பந்து வீரர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

Advertiesment
எதிரணியை சேர்ந்தவரின் ஆணுறுப்பை கடித்து வைத்த கால்பந்து வீரர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்

Arun Prasath

, வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:52 IST)
பிரான்ஸில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் எதிரணியைச் சேர்ந்தவரின் ஆணுறுப்பை கடித்து வைத்த கால்பந்து வீரரை ஐந்து ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

கிழக்கு பிரான்ஸின் லோர்ரைன் பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால் பந்து போட்டியில், எஸ்சி டெர்வில்லே மற்றும் ஏஎஸ் சோய்டிரிச் ஆகிய இரு அணிகள் மோதின. போட்டியின் இடையிலேயே இரு அணிகளுக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது.

அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு வீரர்களை விலக்கிவிட டெர்வில்லே வீரர் ஒருவர் தலையிட்டார். அப்போது சண்டையிட்டு கொண்டிருந்த சோய்ட்ரிச் வீரர், விலக்கிவிட வந்த வீரரின் ஆணுறுப்பை பலமாக கடித்து வைத்தார்.

வலியில் துடித்த டெர்வில்லே வீரரை மருத்துவ அறைக்கு அழைத்துச் சென்று காயம் பட்ட இடத்தில் 12 தையல்கள் போட்டனர். இதனைத் தொடர்ந்து ஆணுறுப்பை கடித்து வைத்த சோய்ட்ரிச் வீரருக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த அணிக்கு 200 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

காயம்பட்ட வீரர் ஜூன் 30, 2020 வரை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவ்வணிக்கும் 200 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீர் சுரங்கமா?? சோன்பத்ராவில் 3,350 டன் தங்க படிமங்கள்!!