Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”இந்திராகாந்தி பிரதமரானார்” – பிரான்ஸ் பனிப்பாறையில் கிடைத்த இந்திய செய்தித்தாள்!

Advertiesment
World
, செவ்வாய், 14 ஜூலை 2020 (14:18 IST)
பிரான்ஸின் பனிப்பாறை பகுதியில் 1966ம் ஆண்டுகால இந்திய செய்தித்தாள்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

பிரான்ஸில் உணவகம் நடத்தி வரும் டிமோத்தி மோடின் என்பவர் தனது உணவகத்திற்கு அருகே உள்ள பனிமலை சரிவில் ஒரு ஆங்கில செய்தி தாளை கண்டெடுத்துள்ளார். அதில் “இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமரானார்” என தலைப்பு செய்தி இருந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் பனிப்பாறைகளுக்கு இடையே 1966ம் ஆண்டை சேர்ந்த பல்வேறு இந்திய நாளிதழ்கள் கிடைத்துள்ளன.

இந்திய நாளேடுகள் எப்படி பிரான்ஸ் பனிச்சரிவில் கிடைத்தன என்னும் கேள்விக்கு சிலர் விடையளித்துள்ளனர். 1966ம் ஆண்டில் ‘ஏர் இந்தியா 101’ என்ற விமானம் 106 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் பம்பாயிலிருந்து லண்டன் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் மோன் ப்ளாக் பகுதியில் மலையில் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. அதில் இருந்த செய்திதாள்கள்தான் இத்தனை ஆண்டு காலமாக உறைந்திருந்திருக்கிறது.

தற்போது அந்த பகுதிகளில் வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் உருகி வரும் நிலையில் இந்த நாளிதழ்கள் டிமோத்திக்கு கிடைத்துள்ளன. அவற்றை பத்திரமாக சேகரித்து உலர வைத்துள்ளதாகவும், அவற்றை உணவகத்தில் காட்சிக்கு வைக்க இருப்பதாகவும் டிமோத்தி கூறியுள்ளார். 1966ல் வெளியான செய்திதாள்கள் இத்தனை ஆண்டுகள் பனியில் உறைந்து கிடந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸில் இருந்து தூக்கி எறியப்பட்ட சச்சின் பைலட்: அடுத்து யார்?