Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் பறந்த கிட்னி

Webdunia
புதன், 1 மே 2019 (10:45 IST)
அமெரிக்காவின் பால்டிமோர் சிட்டியில் டயாலிஸிஸ் பிரச்சனையால் 8 வருடமாக பாதிக்கப்பட்டிருந்த 44 வயது பெண்மணியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலமாக கிட்னி கொண்டு செல்லப்பட்டுள்ள்து.
அமெரிக்காவின் பால்டிமோர் சிட்டியில் டயாலிஸிஸ் பிரச்சனையால் 8 வருடமாக பாதிக்கப்பட்டிருந்த 44 வயது பெண்மணியின் சிறுநீரக  மாற்று அறுவை சிகிச்சைக்காக, 31.5 மைல் தூரம் ட்ரோனை பயன்படுத்தி சிறுநீரகத்தை கொண்டு சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தியுள்ளது.
 
இதற்கு முன்னர் இதே ட்ரோனில், இந்த அறுவை சிகிச்சைக்கான ரத்தம் கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து  முதல் முறையாக மருத்துவ ரீதியாக, உடல் உறுப்புகள் வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த  முறை அமலுக்கு வந்தால், டிராபிக்கில் சிக்காமல், எளிதில் அவசர மருத்துவத் தேவைகள், குற்றச் செயல்களை கண்டுபிடித்தல்  உள்ளிட்டவற்றுக்கும் ட்ரோன்கள் உபயோகப்படுத்தப் படலாம்.
சாலைகளின் நெரிசலில் சிக்காமல், ஆகாய வழியில் இயக்கப் பயன்படும் இந்த ட்ரோன் டெக்னாலஜியை வாங்குவதற்கும்,  பயன்படுத்துவதற்கும் நிறைய விதிமுறைகளை அரசு மற்றும் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதுபோன்ற அவசர, அத்தியாவசியத்  தேவைகளுக்காக தற்போது ட்ரோன்கள் கையாளப்படுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments