Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மர்மங்கள் நிறைந்த பனிமனிதனின் கால் தடம் ?

மர்மங்கள் நிறைந்த  பனிமனிதனின் கால் தடம் ?
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (14:05 IST)
நம் இந்திய துணைக்கண்டத்தில் நம் நாட்டின் பாதுகாவலாகவும் தடுப்பரணாகவும் இருந்து எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பது இமயமலைதான்.
சமீபத்தில் இமயமலையில் பனிமனிதனின் கால்தடத்தை நம் இந்திய ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.
 
இதுசம்பந்தமாக நமது இந்திய ராணுவம் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : மக்கலு என்ற ராணுவமுகாம் அருகில் இந்த கால் தடம் இருந்தது. இந்தக் கால்தடமானது 32 அங்குலம் அளவு கொண்டதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
webdunia
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பனிமனிதன் உள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.பனிமனிதனை ’எட்டு ’என்று அழைக்கின்றனர்.
 
இதற்கு முன்னதாக கடந்த 1951 ஆம் ஆண்டு பிரிட்டன் தேசத்தில் வசித்து வந்த ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தைக் காண வந்தபோது பனிமனிதனின் கால் தடத்தைக் கண்டதாக அப்போது பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக சார்பில் கோமதிக்கு ரு. 15 லட்சம் பரிசுத்தொகை