ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து விமான கட்டணங்கள் உயரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து விமான எரிபொருளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லியில் தற்போது ஒரு கிலோ பெட்ரோல் விலை ரூ.93,530 ஆக உள்ளது என்றும் இது பிப்ரவரி மாத விலையை விட 9 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது
எனவே இன்னும் ஒரு சில நாட்களில் விமான கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.