Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி: பயனாளிகள் மகிழ்ச்சி

பேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி: பயனாளிகள் மகிழ்ச்சி
, வெள்ளி, 5 ஜூன் 2020 (20:18 IST)
பேஸ்புக் புகைப்படங்களை கூகுளுக்கு மாற்றும் வசதி
ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இனி நேரடியாக கூகுள் போட்டோ செயலிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் நம்பர் ஒன் சமூக வலைதள செயலியாக இருப்பது பேஸ்புக் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேஸ்புக்கில் பயனர்கள் பலர் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருவது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களை நேரடியாக கூகுள் போட்டோவுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வசதியை கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இந்த வசதியை பெறுவதற்காக உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அதன் பின்னர் அதில் ’Your Facebook Information’ என்ற ஆப்ஷனில் உள்ள ‘Transfer a copy of your photos or videos’ என்பதை க்ளிக் செய்தால், பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு நேரடியாக ஷேர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 9ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் - முதல்வர் பினராயி விஜயன்