Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவை பொசுக்கும் வெப்ப அலை..! ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:29 IST)
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை கடுமையாக வீசி வரும் நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட சில பகுதிகளில் அதீத வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெப்ப அலை தாங்க முடியாமல் மக்கள் பலர் உயிரிழந்து வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்பெயினில் கடந்த வியாழக்கிழமை மட்டும் வெப்ப அலை தாக்கத்தால் 440 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக வெப்ப அலையால் 1,027 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

பிரான்சின் மேற்கு பகுதியில் 111.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் வரும் நாட்களில் வெப்பம் 104 பாரன்ஹீட்டை தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments