Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டர் பயனாளர்கள் உஷார்! ரூல்ஸை மொத்தமாக மாற்றும் எலான் மஸ்க்?

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (08:24 IST)
பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் சமூக செயலியான ட்விட்டரை சமீபத்தில் உலக பில்லியனரான எலான் மஸ்க் மொத்தமாக வாங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரின் சிஇஓவாக பணியாற்றிய பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பணியை விட்டு நீக்கினார்.

அடுத்தகட்டமாக ட்விட்டர் சமூக வலைதளத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்ற உள்ளாராம் எலான் மஸ்க். இந்த தளத்தை லாப நோக்கில் நடத்தப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் ட்விட்டரின் கொள்கை மற்றும் நெறிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய உள்ளடக்க மதிப்பாய்வு கவுன்சிலை அமைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த புதிய கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ட்விட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் தவறான தகவல்கள் வெளியிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் தங்கள் கணக்குகளை தொடங்குவதற்கு புதிய விதிமுறைகள் வாய்ப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments