Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூமிக்கு கற்பனைக்கு எட்டாத அழிவுகள்; நெருங்கும் சிறு கோள்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Advertiesment
பூமிக்கு கற்பனைக்கு எட்டாத அழிவுகள்; நெருங்கும் சிறு கோள்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (18:22 IST)
பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் சிறுகோள்கள் பூமியை நோக்கி விரைவில் வர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


 

நாசா மையமானது அவ்வப்போது சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. கடந்த மே மாதம் கூட பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் சிறுகோள்கள்  வலம் வருவதாகவும் இந்த கோள்கள் பூமியுடன் சேர்ந்து சூரியனையும் சுற்றி வருவதாகவும் கூறியிருந்தது.

இந்நிலையில், விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஜோசப் நூத் கூறுகையில், பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் சிறுகோள்கள் பூமியை நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதே போன்று கடந்த 1996 மற்றும் 2014லும் நடந்துள்ளது. ஆனால் அப்போது பெரிதாக தாக்கம் ஏதும் ஏற்படவில்லை.

webdunia

 

சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே ஆயிரக்கணக்கில் சிறுகோள்கள் மற்ற கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு பெரிய மலையளவு கூட இருக்கும், அவை பூமி மீது மோதினால் கற்பனைக்கு எட்டாத அழிவுகள் ஏற்படும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தை தடுக்க விமான நிலையத்தில் பலியிடப்பட்ட ஆடு