Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விதியை மீறி கொண்டாட்டம்! – மன்னிப்பு கேட்ட டச்சு அரச குடும்பம்!

Advertiesment
கொரோனா விதியை மீறி கொண்டாட்டம்! – மன்னிப்பு கேட்ட டச்சு அரச குடும்பம்!
, வியாழன், 16 டிசம்பர் 2021 (11:39 IST)
நெதர்லாந்தில் கொரோனா விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் அரச குடும்பம் மன்னிப்பு கேட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரானின் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கிறிஸ்துமஸ் கால விடுமுறையை முன்னதாக அறிவித்த நெதர்லாந்து பள்ளிகளை மூடியுள்ளது.

மேலும் நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 6 விருந்தினர்களுக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டச்சு அரச வம்சமான இளவரசி அமாலியாவின் 18வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் விதிமுறைகளை மீறி 21 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தகவல் பொதுமக்களிடையே பரவி பல்வேறு விமர்சனங்களை அரச குடும்பம் சந்தித்துள்ளது. இந்நிலையில் தங்கள் தவறுக்கு வருந்துவதாக டச்சு அரச குடும்பம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் உதயநிதி அமைச்சராக வேண்டும்! – ஆதரவு களத்தில் அடுத்த அமைச்சர்!