Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் துறைமுகத்தில் வெடித்து சிதறிய கண்டெய்னர் கப்பல்! – ஷாக்கிங் வீடியோ!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (08:36 IST)
உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான துபாய் துறைமுகத்தில் கண்டெய்னர் கப்பல் வெடித்து சிதறிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கடல்வழி போக்குவரத்தில் மிகப்பெரிய துறைமுகங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம். இந்த துறைமுகத்தில் ஏராளமான கப்பல்கள் நின்ற நிலையில் நேற்று கண்டெய்னர் கப்பல் ஒன்றில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் வான உயரத்திற்கு நெருப்பும், கரும்புகையும் எழுந்தது.

சுமார் 25 கிலோ மீட்டர் அப்பாலும் இந்த வெடிவிபத்தின் காட்சிகள் தெரிந்த நிலையில், துறைமுகங்கள் அருகில் இருந்த கட்டிடங்கள் வெடிவிபத்தின் அதிர்ச்சியால் குலுங்கியதாகவும், கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வெடிவிபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments