Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

156 பெண்களை சீரழித்த காமுகன்: பெருமையுடன் 175 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி!

Advertiesment
156 பெண்களை சீரழித்த காமுகன்: பெருமையுடன் 175 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி!
, வியாழன், 25 ஜனவரி 2018 (18:32 IST)
156 பெண்களை தனது காமவேட்டையால் சீரழித்த காம வெறி பிடித்த மருத்துவருக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனையை பெருமையுடன் வழங்கியுள்ளார் நீதிபதி ஒருவர். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்தது.
 
அமெரிக்கவையே அதிர வைக்கும் அளவுக்கு ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவர் நடத்திய காம வேட்டை அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அந்நாட்டை உலுக்கியுள்ளது.
 
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். இவர் சிகிச்சை என்ற பெயரில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் மருத்துவர் லாரிக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியம் அளித்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
கைல் ஸ்டீபன் என்ற பெண் 6 வயது சிறுமியாக இருந்தபோது அவரிடம் தவறாக நடந்துள்ளார் மருத்துவர் லாரி. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனையாக இருந்த மரோனே 15 வயதாக இருக்கும் போது அவருக்கு தூக்க மாத்திரை அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இந்த லாரி நாசர்.
 
ஒலிம்பிக் வீரங்கனை வைபர் மருத்துவர் லாரி நாசரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்படி 156 பெண்கள் மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் மருத்துவர் லாரி நாசருக்கு எதிராக தங்கள் சாட்சியை நீதிபதி ரோஸ்மாரி முன்னிலையில் பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து அந்த கொடூர எண்ணம் கொண்ட மருத்துவருக்கு எதிராக தீப்பை வழங்கிய நீதிபதி ரோஸ்மாரி, லாரி நாசர், உன்னைத் தண்டிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன். நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன் என கூறி தீர்ப்பு நகலில் அதிரடியாக கையெழுத்திட்டார் அவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலண்டியரா வந்து மட்டிக்கொண்ட எச்.ராஜா: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!