Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவசரமாக தரையிறக்கம்; இரண்டாக உடைந்த விமானம்! – அமெரிக்காவில் பரபரப்பு!

Advertiesment
Flight Crash
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:13 IST)
கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து நேற்று வந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது. அதை தொடர்ந்து விமானம் தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், விமான நிலையமும் மூடப்பட்டது. இந்த விமான விபத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவசங்கர் பாபாவுக்கு எச்சரிக்கையுடன் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!