Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் மூன்றே வாரத்தில் இருமடங்கான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

Advertiesment
அமெரிக்காவில் மூன்றே வாரத்தில் இருமடங்கான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
, புதன், 14 ஜூலை 2021 (11:06 IST)
அமெரிக்காவில் டெல்டா உருமாற்ற கொரோனா பரவல் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை இப்போதுதான் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் டெல்டா என்ற உருமாற்ற கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது. அதற்கு டெல்டா வைரஸ் பரவலே காரணம் என சொல்லப்படுகிறது.

ஜூன் மாதம் 23ம் தேதி வாக்கில் தினசரி பாதிப்பு 11,300 ஆக இருந்தது, இது கடந்த திங்களன்று 23,600 ஆக அதிகரித்திருக்கிறது. வெறும் மூன்றே வாரத்தில் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வு வேண்டாம் என ஏராளமான கோரிக்கைகள்! – முதல்வரிடம் அறிக்கை அளித்த ஏ.கே.ராஜன்!