Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு

Advertiesment
இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு
, ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (17:25 IST)
இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சுனாமியால் பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 168 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாணமைக்  குழு ‘சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது, 650-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், சுனாமி தாக்கியப் பலப் பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ‘ என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 வா? தேர்தலா? – குழப்பத்தில் கமல்