Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கானை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 10 மே 2023 (18:52 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை 8 நாள் சிறையில் அடைக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சில வழக்குகள் தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு அவர் லாகூரில் இருந்து  வந்துள்ளார்.

இந்த நிலையில்,  நேற்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர்.

அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இம்ரான் கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

நேற்று கைது செய்யப்பட்ட இம்ரான் கானை சிறப்பு படையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவரை 8 நாள் சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தன்னை துணை ராணுவத்தினர் துன்புறுத்தியதாகவும் இம்ரான் கான் நீதிமன்றத்தில்  குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments