Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து

Advertiesment
முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து
, சனி, 18 மார்ச் 2023 (17:11 IST)
பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.   கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு   நிலுவையிலுள்ளன.

இதில் முக்கியமானது, அமர் பிரதமராக இருந்தபோது, வழங்கிய பரிசுப் பொருட்களை அதிகவிலைக்கு விற்றதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, இதற்கான விசாரணை இஸ்லாமாத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக இம்ரான் இன்று லாகூரிலுள்ள ஜமன் பூங்கா இல்லத்திற்கு இருந்து இஸ்மாலாத் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவருடன் அவரது பாதுகாப்பிற்கு வாகனங்களும் உடன் சென்றன.

இந்த நிலையில், செல்லும் வழியில், இம்ரான்கானின் பாதுகாப்பு வாகனம் ஒன்று   கழிந்து விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்  அவரைக் கைது செய்யும்  முயற்சியில் போலீஸார் இறங்கினர். இதுபற்றி அறிந்துகொண்டு அவர் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீஸாருக்கும், இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில்,போலீஸார் காயமடைந்தனர்.

இதற்கிடையே இம்ரான்கானை கைது செய்ய  லாசூர் நீதிமன்றம் இடைக்கால விதித்துள்ள நிலையில்,  இம்ரான்கான் ஆதரவாளர்கள் போலீஸாரை தாக்கியது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கீழ் தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டது.

இந்த  நிலையில் இம்ரான் கான் தற்போது 9 வழக்குகளில் லாகூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா சாலையில் அனாதையாக ரூ.500 கட்டுக்கள்.. போலீசார் அதிர்ச்சி..!