Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கும் பரவிவிட்ட கொரோனா வைரஸ்: கட்டுப்படுத்தவே முடியாதா?

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (07:40 IST)
நாய்க்கும் பரவிவிட்ட கொரோனா வைரஸ்
இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது நாய்க்கும் பரவி விட்டதால் இனி உலகம் முழுவதும் இந்த வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது மனிதர்களுக்கு மட்டுமன்றி ஹாங்காங் நகரத்தில் உள்ள ஒரு நாய்க்கும் பரவி உள்ளதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது
 
நாயிடமிருந்து மிக வேகமாக மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா  வைரஸ் தாக்கப்பட்ட நாயை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்த நாயின் ரத்தப் பரிசோதனை ஆய்வு செய்து வருவதாகவும் முழு அளவில் குணம் அடைந்தால் மட்டுமே அந்த நாய் உரிமையாளருடன் ஒப்படைக்கப்படும் என்றும் ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவும் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments