Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கோ: புதிதாகக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவில் இடிந்து விபத்து !

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (14:16 IST)
காங்கோவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழைக்காலத்தில் அங்குள்ள பழைய பாலம் அடிக்கடி சேதம் அடைந்த்தால், மக்களால் ஒரு பகுதியில் இருந்து  மற்றொரு பகுதிக்குச் செல்லமுடியவில்லை.

எனவே, மக்கள் ஆற்றைக் கடப்பதற்காக சமீபத்தில் அரசு சார்பில் அங்கு ஒரு புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டது.  இந்தப் பாலத்தின் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் வந்து ரிப்பன் வெட்டிப் பாலத்தை திறந்து வைத்த அடுத்த்  நிமிடம் பாலம் இடிந்து விழுந்தது. இதில், அனைவரும் கீழே விழுந்தனர்.

யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

நேரு மாடல் தோல்வியடைந்து விட்டது. சீர்திருத்த முயற்சிகள் செய்கிறோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்..!

த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments