Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பார்லி..,யில் மோதல்! சிலர் காயம்!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (12:54 IST)
இலங்கையில் சில நாட்களாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிற நிலையில் நேற்று இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்க்ஷே வெளிநடப்பு செய்ததை அடுத்து அங்கு சிறிதுநேரம் கூச்சல் குழப்பம் நேரிட்டது.   எனவே அவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக  சபாநாயகர் அறித்தார்.இந்நிலையில் இன்று கூடிய பார்லியில் ராஜபக்‌ஷே பேச துவங்கினார் .அப்போது ர்ணில் தரப்பினர் குரல் எழுப்பினர் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு.கைகலப்பாகி மோதலில் முடிவடைந்தது. இதில் சிலர் காயமடைந்தனர்.
அதிபர் சிறிசேனா முன்னாள் அதிபர் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவு கொடுத்து வந்த நிலையில் தற்போதைய பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கே தான் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும், தான் இலங்கையின் பிரதர் எனவும் கூறியிருந்தார்.
 
ஆனால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட  ராஜபக்க்ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 
இதனால் ராஜபக்க்ஷே நேற்று அவையில் இருந்து திடீரென வெளியில் கிளம்பி சென்றார். இதனால் அவையில் குழப்பம் நீடித்தது.
 
ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவாளர்கள்  அவைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்துவந்தனர்.
எதிர்கட்சி  உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக மாறினர். இதனால் ராஜபக்ஷேவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அவையில் கூச்சல் ஏற்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் கரு ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.
 
இன்று காலையில் பார்லியில் மீண்டும் அவை கூடிய போது ரணில்,ராஜபக்‌ஷே எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
 
இலங்கையில் பார்லி.., கலைப்புக்கு கோர்ட் விதித்ததுடன் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபக்‌ஷே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது நிலையில் இன்று மீண்டும் கூடிய பார்லியில் ராஅபக்‌ஷே பேச முற்பட்டபொழுது இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் எம்பிக்கள் குரல் எழுப்பினர். இதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து ரணில் பேசுக்கொண்டிருந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ரணில் கட்சியினர் ராஜபக்‌ஷே - சிற்சேனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 
 
பின் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததால் இரு கட்சிடினரும் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று கூச்சலிட்டனர்.
 
இதனைதொடர்ந்து சில எம்பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
 
இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெயக்குமார் ,ரணில் மற்றும் ராஜபக்‌ஷே சபையை விட்டு வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments