Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...?

வீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...?
எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி  பட்டால் செல்வம் குவியும் என்றும் கூறப்படுகிறது.
வீட்டின் கிழக்கு திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேரபொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
 
கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும்  மனகஷ்டம் தீரும். கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான  எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
 
குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
 
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும்போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர் நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும். புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (15-11-2018)!