Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை பகைச்சிக்கிட்டா அது உங்களுக்கும்தான் நஷ்டம்! – சீனா எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (08:17 IST)
சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனால் இந்தியாவும் சம அளவில் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் சீன – இந்திய படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. மேலும் மேம்பாட்டு ஒப்பந்தங்களிலிருந்து சீன நிறுவனங்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வீடோங் “சீனாவுடனான உறவுகளை துண்டிப்பதனால் இந்தியாவும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருவொருக்கொருவர் இன்றி நம்மால் வாழ முடியாது என்ற கட்டமைப்பு இன்னமும் உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் கல்வான் எல்லைப்பகுதியில் சீன ராணுவங்கள் நுழைந்திருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்த அவர் கல்வானில் இந்திய எல்லைக்குள் சீன படைகள் நுழையவில்லை என கூறியுள்ளார்.

சீனா முழுமையாக படைகளை திரும்ப பெற்று இந்தியாவுடன் நேர்மையாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம் என்று இந்திய செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் மீது குண்டுமழை பொழிந்த பாகிஸ்தான்! போர் உருவாகும் சூழல்?

100வது பிறந்த நாளை கொண்டாடு நல்லகண்ணு.. கமல்ஹாசன் வாழ்த்து

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. எஃப்.ஐ.ஆரில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

20 ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடு! சுனாமி நினைவு தினம்! - கடற்கரையில் அஞ்சலி!

டிசம்பர் 27ஆம் தேதி தமிழகம் வரவிருந்த அமித்ஷா திட்டம் ரத்து; ஜனவரிக்கு ஒத்திவைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments