Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானசேவை சகஜ நிலைக்கு திரும்ப 2024 ஆகும்! – சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்!

விமானசேவை சகஜ நிலைக்கு திரும்ப 2024 ஆகும்! – சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்!
, வியாழன், 30 ஜூலை 2020 (16:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சகஜ நிலைக்கு திரும்ப 2024ம் ஆண்டு வரை ஆகும் என சர்வதேச விமான போக்குவரத்து கழகம்.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியதால் கடந்த ஜனவரி மாதம் முதலாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

தற்போது சில நாடுகளில் உள்ளூர் விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட கொரோனா பாதிப்புகள் மோசமடைந்ததை தொடர்ந்து சகஜநிலை திரும்ப மேலும் நாட்களாகும் என தெரிகிறது. 2023க்குள் விமானசேவை சகஜநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு 2024 வரை ஆகலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவின் பெயரில் ரூ. 3 கோடி வசூலித்த இளைஞர்கள் !