Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலிருந்து வந்த மீன்களில் கொரோனா தொற்று! – தடை விதித்த சீனா!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (08:11 IST)
இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாகியும் கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் மெல்ல கொரோனாவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மீன்களை மாதிரிக்காக சோதித்த சீன சுங்க துறை அதிகாரிகள் அந்த மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதியை சீனா ஒரு வார காலம் தடை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments