Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெட் வேகத்தில் பரவி வரும் ”கொரனா வைரஸ்; வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார்..” சீனா

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (12:36 IST)
சீனாவில் கொரனா வைரஸால் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரனா வைரஸால் இது வரை 132 பேர் பலியாகியுள்ளனர். மேலும் அங்கு 3,554 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும் எனவும், இன்னும் 10 நாட்களில் வைரஸ் தாக்குதல் வீரியம் அடையும் எனவும் மருத்துவ நிபுணர் குழு எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறை அதிகாரிகள், “சீனாவின் உகான் மற்றும் ஹுபாய் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் அனைத்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கிருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றுமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால், அதற்கான உதவியை சீனா அளிக்கும்” என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments