Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை குளமாக்கிய வீடியோ: போதையில் மயங்கிய தாயை எழுப்பும் குழந்தை!

கண்களை குளமாக்கிய வீடியோ: போதையில் மயங்கிய தாயை எழுப்பும் குழந்தை!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:08 IST)
அமெரிக்காவில் அதிகமாக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கடை ஒன்றில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரை, அவரின் 2 வயது குழந்தை அழுது கொண்டே எழுப்பும் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 
 
அமெரிக்காவில் லாரன்ஸ் என்ற பகுதியில் ஃபேமிலி டாலர் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் வந்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.
 
போதை பொருள் எடுத்து இருந்ததால், அப்பொழுது அந்த பெண் எதிர்பாரதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரின் 2 வயது குழந்தை அந்த பெண்ணை எழுப்பும் காட்சி கண்களை குளமாக்குகிறது. நீண்ட நேரமாக தனது தாயை அந்த குழந்தை அழுது கொண்டே எழுப்ப போராடுகிறது.

 
 
தாயின் கன்னத்தில் அடித்தும், நெஞ்சில் எழுப்பியும் அந்த பெண் எழுந்தபாடில்லை. இதனையடுத்து குழந்தையின் அழுகையை கேட்டு அங்கு வந்த கடை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
 
மயக்க நிலையில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments