Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் தொடக்கம்.. கலாஷேத்ரா கல்லூரி நிலவரம்..!

Advertiesment
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் தொடக்கம்.. கலாஷேத்ரா கல்லூரி நிலவரம்..!
, புதன், 5 ஏப்ரல் 2023 (13:40 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஒரு பேராசிரியர் உள்பட நான்கு பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
 
இதில் ஒரு பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் 3 பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் தேர்வில் மாணவிகள் பங்கேற்குமாறும் கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து இன்று காலை தேர்வுகள் தொடங்கிய நிலையில் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு.. மணமகன் பலி: மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது