Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...

Advertiesment
இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
, சனி, 16 செப்டம்பர் 2017 (12:10 IST)
விடுமுறையை கழிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த பத்திரிக்கையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இங்கிலாந்தில் வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தியாளராக பணி புரிந்து வந்தவர் பால் மெக்லன் (24). இவர் தனது விடுமுறையை கழிப்பதற்காக சமீபத்தில் தனது நண்பர்களுடன் இலங்கைக்கு வந்திருந்தார். 
 
அந்நிலையில், நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில் இறங்கி சற்று நேரம் நின்றுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த முதலை அவரை கடித்து நீருக்குள் இழுது சென்றது. 
 
உடனடியாக இதுபற்றி மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்நிலையில் இன்று காலை அவரது உடல் ஒரு நீர்ப்பரப்பின் சகதிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ஆறேழு இடங்களில் முதலை கடித்த காயம் இருந்தது. 
 
இந்த சம்பவம் அவருடன் வந்த நண்பர்களுக்கும், அவரின் உறவினர்களுக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல், டீசல் விலையை இந்திய அரசு குறைக்காததற்கு காரணம் அரசியலா, வருவாயா?