Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த கட்சியிலேயே நெருக்கடி… பதவி விலகுகிறாரா போரிஸ் ஜான்சன்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:31 IST)
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு விருந்தில் கலந்துகொண்டது அவரது பதவிக்கே ஆபத்தாக வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 முதலாக பரவி வரும் நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. 2020ல் இங்கிலாந்திலும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்த சமயம் தனது அலுவலக கார்டனில் தேநீர் விருந்து நடத்தியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.  மேலும் அதை அவர் 7 மாதமாக மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்ததும் மிகப்பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ளது. இதை போரிஸ் ஜான்சனின் உதவியாளர் வெளியில் கசியவிட்டது இங்கிலாந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் மற்றும் தங்கள் சொந்த கட்சியினரே போரிஸ் ஜான்சனுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் பொதுமக்களிடையேயும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரின் மன்னிப்பை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் சொந்த கட்சியினர் கூட அவர் பதவி விலக வேண்டும் என நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை இழக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் பிரதமர் பதவியை ஏற்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? அண்ணா பல்கலை விவகாரம் குறித்து ஈபிஎஸ்

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம்.. சோதனை ஓட்டம் தொடங்கியது..!

லுங்கி கட்டிக்கொண்டு இசைக் கச்சேரிக்கு வந்த டி.எம்.கிருஷ்ணா! நிரம்பி வழிந்த மியூசிக் அகாடமி!

அரசு ஊழியர் பணி ஓய்வு விழா! கண் முன்னால் பலியான மனைவி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments