Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிரியாவின் அதிபராகிறார் பஷார் அல் அசாத்

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (12:25 IST)
சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராகிறார்.

 
பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா மற்றும் மகமோத்அகமத் மாரி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
 
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் அதிபர் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
 
கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா. ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு அதிபர் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments