Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னியில் பயங்கர காட்டுத் தீ: மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:27 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
 
சிட்னியில் கடந்த சனிக்கிழமை புற்கள் அதிகம் இருக்கும் காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகம் விசும் பகுதி என்பதால் தீ வேகமாக பரவியது.
இந்த தீ விபத்தால் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பு நாசம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகின்றனர்.
 
மேலும், தீ மக்கள் வசிக்கும் இடத்துக்கு பரவ வாய்ப்புள்ளதால், அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தால் காயமோ, உயிரிழப்போ ஏதும் இல்லையென கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

முதலாளியுடன் மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. 2026 தேர்தலுக்கு ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments