Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகளாகச் சிறை தண்டனை !

Aung San Suu Kyi
, சனி, 3 செப்டம்பர் 2022 (19:04 IST)
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகளாகச் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மியான்மர் நாட்டை ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஆங் சான் சுகி அவர்களுக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இராணுவ ஆட்சியை எதிர்த்து கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்த 77 வயதான ஆங் சான் சூகி தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

இந்த நிலையில், ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டிய ஆன் சான் சூயி, கடந்த 2020 ஆம் ஆண்டில்  நடந்த தேர்தலில்  வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்.   இதை மறுத்து, ராணுவத்தினர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, கடந்தாண்டு பிப்ரவரியில் ஆட்சி கலைக்கப்பட்டது. எனவே ஆங் சான் சூயி வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராணுவத்திற்கு எதிராகக் போராட்டத்தை தூண்டியது, கொரொனா கால விதிகளை மீறியது, அவர் ஆட்சியில் நடந்த ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் தொடுக்கப்ட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த  மியான்மர் நீதிமன்றம், ஆங் சன் சூயின் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை வழங்கியது.  இதையடுத்து, அவருக்கு பல்வேறு வழக்குகள் மீதான வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, தேர்தல் மோசடி வழக்கில் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளைவிட நன்றாகப் படித்த மாணவன்: சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூர செயல்!