Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கப்படைகள் – ட்ரம்ப் டிவீட்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (09:14 IST)
சிரியாவில் ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவம் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புத் தலைதூக்க தொடங்கியது. மெல்ல மெல்ல அதிகமான அவர்களின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் சிரியாவின் ஒரு சிலப் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு இணை அரசங்கம் நடத்துமளவுக்கு முன்னேறினர். அங்குள்ள மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றனர்.

இந்த தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க சிரிய அரசு மற்றும் அந்த நாட்டு மற்றொருப் போராளிக் குழுவான குர்துப் போராளிகளோடு இணைந்து அமெரிக்க ராணுவமும் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது. சில ஆண்டுகளாக அங்கு தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க ரானுவத்துக்கும் சண்டை நடந்து வந்தது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அங்குள்ள தீவிரவாதிகளை முழுமையாக அழித்து விட்டதாகவும் அதனால் அங்குள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்ப இருக்கிறார்கள் என அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments