Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது பொருளாதார தடை: அமெரிக்கா கூறுவது என்ன?

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதலில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஆயுதங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தால் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இந்தியா ரஷ்யாவிற்கு இடையே ஆயுத கொள்முதலுக்காக ரூ.31,500 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ரஷியாவிடம் ஆயுத கொள்முதல் செய்யும் இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க கூடும். 
 
ஆனால், இதுகுறித்து அமெரிக்க உதவி ராணுவ மந்திரி கூறியது பின்வருமாறு, இந்தியா ரஷியா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், எதிர்காலம் குறித்து இந்தியாவுடன் நாங்கள் பேச வேண்டும். 
 
பொருளாதார தடை விதிக்கப்படுவதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் செய்யப்படும் கொள்முதல்களுக்கும் இத்தகைய விலக்கு அளிக்கப்படும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments