Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெத்து பில்டப்; கச்சா எண்ணெய் வாங்க அனுமதி: ஜகா வாங்கிய அமெரிக்கா!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (14:38 IST)
ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்தது. மேலும், ஈரானுடன் இந்த நாடுகளும் வர்த்தகம் செய்யக்கூடாது என மிரட்டியது. 
 
ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. அதோடு, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் 5 ஆம் தேதியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தது. 
 
ஆனால், இந்தியாவோ ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் உருதியாக இருந்தது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவ்ல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளபோதிலும், சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் 73 நாடுகளின் தூதுவர்கள்.. கூடுதல் பாதுகாப்பு..!

நேர்மையற்ற மனிதர்கள் பட்டியலில் மோடி, ராகுல் காந்தி: ஆம் ஆத்மியின் சர்ச்சை அறிவிப்பு..!

தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ.. புதுவை சபாநாயகர் கருத்தால் பரபரப்பு..!

76வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றிய கவர்னர்! 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments