Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான் கூறுவது சரியல்ல... அமெரிக்கா தரப்பு விளக்கம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (12:46 IST)
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. 

 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சி அமளி செய்தது. அதன் விளைவாக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி தற்போது தனது ஆதரவை எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவையான நிலையில் எம்.க்யூ.எம் ஆதரவால் எதிர்கட்சி 177 இடங்களை கையில் வைத்துள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்படும் என பேச்சு எழுந்துள்ளது.
 
இதற்கிடையே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து இம்ரான் கானின் குற்றச்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு விதிகள், நடைமுறைகளை முழுவதுமாக மதிப்பதாகவும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments