Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான விதிகள் எதிரொலி: சீனாவில் இருந்து வெளியேறுகிறது அமேசான்

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (07:21 IST)
உள்ளூர் நிறுவனங்களின் வர்த்தக போட்டி, சீன அரசின் கடுமையான விதிமுறைகள் ஆகியவை காரணமாக சீனாவில் கடந்த 15 ஆண்டுகள் ஆன்லைன் வர்த்தக சேவை செய்து கொண்டிருந்த அமேசான் நிறுவனம் தற்போது நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
 
சீனாவில் அமேசானுக்கு போட்டியாக உள்ளூர் நிறுவனங்களான அலிபாபா மற்றும் ஜே.டி.காம் ஆகிய நிறுவனங்கள் புதிய சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றன. மேலும் இந்த இரு நிறுவனங்களுக்கும் சீன அரசின் பெரும் ஒத்துழைப்பு உள்ளது. ஆனால் வெளிநாட்டு நிறுவனமான அமேசானுக்கு மட்டும் சீன அரசு கடும் விதிமுறைகளை விதித்து வருகிறது. இதனால் வேறு வழியின்றி வரும் ஜூன் 18 முதல் சீனாவில் ஆன்லைன் வர்த்தக சேவையை நிறுத்தி கொள்வதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இனி சீனாவில் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு பொருட்களை மட்டுமே வாங்க முடியும்
 
இருப்பினும் அமேசானின் வெப் சேவைகள், கிண்டில் இ-புத்தகங்கள் மற்றும் கிராஸ்-பார்டர் செயல்பாடுகள் சீனாவில் தொடரும் என்று அமேசான் அறிவித்துள்ளது. அமேசானின் இந்த அதிரடி முடிவால் சீன நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் சீன மக்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments