Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (12:53 IST)
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஜாங்கை சந்திக்க சீனா வருவதாக பீட்டர் கூறியுள்ளார். அதற்கு ஜாங்கும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து, பீட்டர் நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் 4500 கிலோ மீட்டர் கடந்து சீனா வந்து சேர்ந்தார்.


 


ஆனால், ஜாங் விமான நிலையத்தில் இல்லை, பீட்டர் ஜாங்கை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. காதலி வருவார் என்ற நம்பிக்கையில், பீட்டர் விமானநிலையத்திலேயே காத்துகிடந்தார். 10 நாட்கள் கடந்தும் ஜாங் வரவில்லை, பீட்டரின் உடல்நிலை மோசமானது தான் மிச்சம். பிறகு, விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொலைக்காட்சி மூலமாக பீட்டர்  சீனாவில் இருப்பதை ஜாங் தெரிந்துக்கொண்டுள்ளார். ஆனால், ஜாங் இன்னும், அவரை வந்து சந்திக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments