Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சணக்கான பணத்தை தின்ற ஆடு... ஆவேசத்தில் வெட்டி கறி சமைத்த குடும்பம்

லட்சணக்கான பணத்தை தின்ற ஆடு...  ஆவேசத்தில் வெட்டி கறி சமைத்த குடும்பம்
, சனி, 8 டிசம்பர் 2018 (15:34 IST)
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ்ந்த நாடு செர்பியா. இங்கு ரனிலோவிச் என்ற ஊரில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம் வசித்து வந்தது. இதன் தலைவர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
மிகவும் வறுமையானர் என்பதால். கையில் கிடைத்த பணத்தை எல்லாம் சேமிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் 16 லட்சம் ரூபாய் அளவுக்கு பணத்தை சேர்த்துள்ளார்.
 
இந்த பணத்தை வைத்து பல்வேறு தேவைகளை நிறைவேற்ற அவர் திட்டம் கொண்டிருந்தார். அவர் குடும்பமும் இதற்காக பல்வேறு ஆலோசனைகளை அவருக்கு  வழங்கினார்கள்.
 
இவர்கள் திட்டம் தீட்டியதில் தவறில்லை. ஆனால் எல்லோருமாக திட்டம் தீட்டிவிட்டு  ஒருநாள் காலையில் வயலுக்கு செல்லும் போது மொத்த பணத்தையும் மேஜையின் மீது வைத்து சென்று விட்டார்கள். அதேசமயம் கதவும் தாழிடப்படாமல் இருக்கவே வெளியே மேய்ந்து கொண்டிருந்த அவர்களின் ஆடு வீட்டுக்குள் நுழைந்து  மொத்த பணத்தையும் தின்றுள்ளது.
 
வயலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியவர்கள் பணத்தை காணவில்லை என ஒரு  நூல் இடம் விடாமல் எல்லா இடத்திலும் தேடி பார்த்துள்ளனர்.
 
கடைசியில் ஒரு ஆடு மட்டும் வீட்டுக்குள் அமர்ந்து அதன் வாயில் சில பணத்தாள்கள் ஒட்டி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை ஆடு தின்றுவிட்டதை அறிந்து அனைவரும் கோபமடைந்தனர்.அதனால் ஆட்டை  கொன்று அவர்கள் அதில்  பிரியாணி சமைத்து சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேய்ட்டி புயல் எப்போது தாக்கும்? வெளியான அதிர்ச்சி தகவல்